close
Choose your channels

'வலியை தாங்கிகிட்டவன் தான் ஜெயிக்க முடியும்: 'எனிமி' டிரைலர்

Saturday, October 23, 2021 • தமிழ் Comments

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனிமி’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரையும் அவரது பெற்றோர்களான தம்பி ராமையா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் போட்டியாளர்களாகவே வளர்த்து வருகின்றனர். ஆரம்பம் முதலே இருவரும் போட்டியாளர்களாக வளர்ந்து வரும் நிலையில், வளர்ந்த பின்னரும் ‘எனிமி’யாக மாறியது ஏன் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தின் பிளஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz