close
Choose your channels

முருகதாஸ் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள்? விஷால் கேள்வி

Friday, November 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முருகதாஸ் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள்? விஷால் கேள்வி

விஜய் நடித்த 'சர்கார்' படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய வேண்டும் என்று நேற்று சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அளித்த புகாரை அடுத்து நள்ளிரவில் நேற்று போலீசார் அவரது வீட்டின் அருகே குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் முருகதாஸை கைது செய்வதற்காக வரவில்லை என்றும் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவே வந்ததாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் ஏன் சென்றனர் என நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், 'தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு படம் வெளிவந்துள்ள நிலையில் எதற்காக பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன என்பது தெரியவில்லை. இந்த படத்தை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். இதில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் சென்றது ஏன்? என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.