த்ரிஷாவின் அதிரடியை பின்பற்றிய விஷால்...

  • IndiaGlitz, [Tuesday,January 17 2017]

சமீபத்தில் பீட்டா மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக விரும்பத்தகாத விமர்சனங்கள் காரணமாக நடிகை த்ரிஷா சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறினார் என்பதை பார்த்தோம்.
த்ரிஷாவை அடுத்து தற்போது நடிகர் விஷாலும் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக விஷால் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கப்பட்டு வந்ததால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் விஷால் சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும், அவரை மீடியாவில் உள்ளவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எம்.ஜி.ஆருக்கு நடிகர் சரத்குமார் புகழாரம்

கோலிவுட் திரையுலகினர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.ஜி.ஆருக்கு அறிக்கை ஒன்றின்மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது...

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல காமெடி நடிகர்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

எம்.ஜி.ஆர் 100வது பிறந்த நாளில் நடிகர் சங்க உறுப்பினர்களின் மரியாதை

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் எம்ஜிஆர் அபிமானிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது...

பரத்-கதிரின் 'என்னோடு விளையாடு' ரிலீஸ் எப்போது?

பரத் மற்றும் 'மதயானை கூட்டம்' கதிர் நடித்த என்னோடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ்...

ஜனவரி முடிந்தால் ஓடிப்போக மாட்டேன். ஜி.வி.பிரகாஷ்குமார்

ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக ஒவ்வொரு ஜனவரி மாதமும் போராடும் அமைப்பினர் ஜனவரி முடிந்தவுடன் காணாமல்...