விஷால் நடிக்க முடியாது என கூறினார்: பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

விஷால், கார்த்தி, சாயிஷா நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தில் கிடைக்கும் லாபம் அனைத்தும் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிக்கு வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த படம் தொடங்கப்பட்டது

இந்த படத்தின் முதல் கட்டப் பணிகள் நடந்த நிலையில் விஷால் இந்த படத்தில் நடிக்க வரவில்லை என ஐசரி கணேஷ் தற்போது புகார் கூறியுள்ளார். நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முழுமையாக முடிவடைய வேண்டும் என்றால் அவர் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

மேலும் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் விஷால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கு முடிய காலதாமதம் ஆகும் என்றும் அதனால் நடிகர் சங்க கட்டிடத்தில் பணிகள்தான் பாதிக்கும் என்றும் எனவே அவர் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்!

செஞ்சி பகுதியைச் சேர்ந்த கடல் கன்னி என்ற 39 வயது பெண் கணவரை இழந்தவர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். விவசாயத்துக்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த

குளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ

டூவீலரில் செல்லும் இளைஞர்கள் பல்வேறு சாகசங்களை செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே

பிக்பாஸ் தர்ஷன் முதல் படம் குறித்த தகவல்: வைரலாகும் வீடியோ!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சீனா; கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழப்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தொகுப்பு

சீனாவின் வுஹான் மகாணத்தில் இருந்து பரவிய  கொரோனா வகை வைரஸால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தாரா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்?

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு உலகப் கோப்பையை வென்றது