முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டியிடுவது உண்மையா? விஷால் விளக்கம்!

  • IndiaGlitz, [Friday,July 01 2022]

முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எதிராக தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஷால், தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஈடுபட முயற்சித்தார். இந்த நிலையில் திடீரென அவர் ஆந்திர மாநில அரசியலில் குதிக்க இருப்பதாகவும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு போட்டியிடும் குப்பம் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின.

இந்த நிலையில் இந்த செய்திக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட்டு குப்பம் தொகுதியில் போட்டியிடப் போவதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. ஆந்திர மாநில அரசியலில் ஈடுபடும்படி என்னை யாரும் அணுகவில்லை. இந்த வதந்தி எப்படி மிக வேகமாக பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை.

என்னுடைய கவனம் முழுவதும் புதிய படங்களில் நடிப்பதில் மட்டுமே உள்ளது. எந்த காலத்திலும் ஆந்திரப் பிரதேசம் மாநில அரசியலில் ஈடுபடும் எண்ணமோ அல்லது சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எதிராக போட்டியிடும் எண்ணமோ எனக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

More News

ராஷி கண்ணாவா இவர்? கிளாமர் போட்டோஷூட்டால் சொக்கி போன நெட்டிசன்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா உச்சகட்ட கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

தயவு செய்து இதை மட்டும் நிறுத்தி கொள்ளுங்கள்: மீனா வேண்டுகோள்

 தயவு செய்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக் கொண்டுள்ளார் 

தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம்: அதிரடி அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த அதிரடி அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

என் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது எனக்கு தெரியாது: நடிகையின் சகோதரர் அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகையின் சகோதரர் தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது தனக்கு தெரியாது என்றும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுகிறாரா விஷால்?

நடிகர் விஷால் விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எதிர்த்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.