தேர்தலை நிறுத்த பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதா? ஐகோர்ட்டில் விஷால் மனு!

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக பதிவாளர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டது விஷாலின் பாண்டவர் அணியினை அதிர்ச்சி அடைய செய்தது

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்திய பதிவாளரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை விஷால் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கையில் பதிவாளர் தலையிட அதிகாரம் இல்லை என்றும், தேர்தலை நிறுத்தியதன் மூலம் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நாளைக்குள் இந்த மனு விசாரிக்கப்பட்டு வரும் ஞாயிறு அன்று தேர்தலை நடத்த வழிவகுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விஷ்ணுவிஷால்-விக்ராந்த் படத்தில் இணைந்த பிரபலம்!

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை சஞ்சீவி என்பவர் இயக்கவுள்ளார்

சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கேரள முதல்வர்!

சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யவில்லை என்பதால் சென்னைக்கு குடிநீர் தரும் அனைத்து ஏரிகள் உள்பட நீர்நிலைகள் வறண்டுவிட்டது.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கமல் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

குஜராத்தில் நரேந்திரமோடி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது அபாரமான வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.

விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்ற முதல் இந்திய நடிகை!

கமல்ஹாசன் நடித்த 'காக்கி சட்டை', 'டிக் டிக் டிக்', 'ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு', 'தம்பிக்கு எந்த ஊரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மாதவி.

சென்னையில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் இருக்காது: நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்

சென்னையில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் இருக்காது என நிதி ஆயோக் தெரிவித்துள்ளதால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.