தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கு விஷாலை முன்மொழிந்த கமல்

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த விஷாலை, சங்கத்தின் நிர்வாகிகள் இன்று காலை சஸ்பெண்டை ரத்து செய்த செய்தியையும், அதனையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் செய்தியையும் சற்று முன்னர் பார்த்தோம்
இந்நிலையில் தற்போது விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்து போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
மேலும் விஷாலின் விண்ணப்பத்தை கமல்ஹாசன் முன்மொழிந்துள்ளார். நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலுக்கு தனது முழு ஆதரவை வெளிப்படையாக அளித்த கமல், தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெளிப்படையாக தனது ஆதரவை முன்மொழிதல் மூலம் தெரிவித்துள்ளார். கமல் ஆதரவுடன் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் களமிறங்கியுள்ளதால் தேர்தல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்தின் 'விவேகம்' டீசர் ரிலீஸ் எப்போது?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏறபடுத்திவிட்டது

தன்னிகரில்லா தமிழக முதல்வர் பெயரில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சஸ்பெண்ட் ரத்தை அடுத்து விஷால் எடுத்த அதிரடி முடிவு

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் விஷாலை இன்றுக்குள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது என்பதை சற்று முன் பார்த்தோம்.

சென்னை மெரீனா: 144 தடை உத்தரவை மீறுவார்களா ஸ்டாலின் - சசிகலா?

சென்னை மெரீனாவில் மாணவர்களின் எழுச்சி போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் கடைசி தினத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இம்மாதம் 12ஆம் தேதி வரை மெரீனாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'விவேகம்' ஃபர்ஸ்ட்லுக்கிற்கு திமுக எம்.எல்.ஏ பாராட்டு

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது.