விஷாலின் 5 மொழி திரைப்படம்: பூஜையுடன் இன்று தொடக்கம்!

  • IndiaGlitz, [Thursday,May 05 2022]

விஷால் நடிக்கும் ஐந்து மொழி திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பும் இன்றே ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த ’எனிமி’ படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஹீரோவாகவும் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடிக்கும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏற்கனவே நடிகர் எஸ்ஜே. சூர்யா மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம் என்றும் அந்த அளவுக்கு அருமையான கதை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக கடந்த 1970களில் சென்னை அண்ணா சாலை இருந்தது போன்ற செட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் இந்த செட்டை கலை இயக்குனர் உமேஷ் அமைத்து வருவதாகவும் கூறப்பட்டது.

More News

'அஜித் 61' படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகை!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'அஜீத் 61' திரைப்படத்தில் 'அசுரன்' படத்தில் நடித்த பிரபல நடிகை இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

சமந்தாவின் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ: செம த்ரில்லர் படம் போல...

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

குழந்தை பெற்ற பிறகும் கிறங்கடிக்கும் கிளாமர் உடை… வைரலாகும் பிரபல நடிகை புகைப்படம்!

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வரும் நடிகை ஸ்ரேயா சரண் நீச்சல் உடை அணிந்துகொண்டு

ஒரு கோடி ரூபாய் ஆடி கார் வாங்கிய மணிரத்னம் பட நாயகி!

மணிரத்னம் படங்களில் நடித்த நடிகை ஒருவர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர ஆடி கார் ஒன்றை வாங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

மைக்கை தூக்கி எறிந்த சம்பவம்: முத்தம் கொடுத்து சமாதானமான பார்த்திபன்!

 பார்த்திபன் நடித்து இயக்கிய 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த போது திடீரென மைக் வேலை செய்யவில்லை என மைக்கை பார்த்திபன் தூக்கி எறிந்தார்.