தேர்தலில் தோல்வி அடைந்த மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த புதிய பதவி

  • IndiaGlitz, [Tuesday,April 04 2017]

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் நம்ம அணியினர் பெருவாரியாக வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றினர். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மிஷ்கின் மட்டுமே நம்ம அணியின் தோல்வி அடைந்த வேட்பாளர் ஆவார். ஆனாலும் மிஷ்கினுக்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முக்கிய பதவி ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: 'எல்லோரும் எதிர்பார்த்த இந்த மாற்றம், ஒரு தனி மனிதனுக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்காக. வரும் வியாழக்கிழமை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
தயாரிப்பாளர்கள் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார்.
தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும். தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் திரைப்பட விருது நிகழ்ச்சியை நடத்த திட்டமிட உள்ளோம். அதே போல இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்' இவ்வாறு விஷால் கூறினார்.

More News

இசை மேதையை நேரில் சந்தித்து ஆசிபெற்ற விஷாலின் 'நம்ம அணி'

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் நம்ம அணியினர் பெரும்பாலான பதவிகளில் வெற்றி பெற்றனர்.

பிரபல இளம் நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

அருள்நிதி நடித்த 'வம்சம்' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' போன்ற திரைப்படங்களிலும், 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட ஒருசில சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மைனாநந்தினி.

எங்களுக்கு இன்னொரு முகம் உண்டு. ஞானவேல்ராஜா எச்சரிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற விஷாலின் நம்ம அணியினர் நேற்று பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் தங்களுக்கு வாக்களித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்

கமல்ஹாசன் ஒரு உண்மையான தீவிரவாதி. சொன்னவர் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்தில் தீவிரவாதிகள் குறித்த விரிவான அலசல் இருந்தது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை.

உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில் விஜய் நாயகிக்கு 2வது இடம்

அமெரிக்காவை மையமாக கொண்ட பஜ்நெட் என்ற அமைப்பு உலகின் மிக அழகான பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை தயார் செய்து அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.