ஸ்டிரைக்கால் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு விஷால் வழங்கிய மிகப்பெரிய உதவி

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலும் நடைபெற்று வருவதால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். பெரிய நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்களை தவிர சினிமா தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் கடந்த ஒரு மாதமாக வேலையின்றி குடும்ப செலவுக்கே திண்டாடி வரும் நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பெப்சி யூனியனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.  இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் நடிகர் சங்கத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. அந்த பணத்தை அப்படியே விஷால், பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார். இந்த பணம், கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வேலையில்லாமல் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு போய் சேரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வரும் சினிமா தொழிலாளர்கள் விஷால் செய்த இந்த உதவிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.