விஷாலின் 'ஆக்சன்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயார் நிலையில் உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தீபாவளி கழித்து புரமோஷன் பணிகளையும் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் ‘ஆக்சன்’ திரைப்படம் வரும் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய திரைப்படங்கள் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சுமார் 20 நாட்கள் இடைவெளியில் ஆக்சன் திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், தமன்னா, கபீர் சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்துள்ளார்

More News

'பிகில்' பெயரை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதை என்பதால் இந்த படத்தில் கால்பந்து போட்டிகள் குறித்தும், விளையாட்டில் உள்ள அரசியல் குறித்தும்

'பிகில்' பட வழக்கின் தீர்ப்பு குறித்த அதிரடி தகவல்!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது

அப்பா-அம்மாவுக்காக சூர்யா-கார்த்தி செய்த வியப்பான விஷயம்!

கோலிவுட் திரையுலகில் பிஸியான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி என்பது தெரிந்ததே. ஒரு படம் முடிவடைதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகி, அடுத்தடுத்து

'பிகில்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ள நிலையில் இரண்டு திரைப்படங்களும் சென்சார் சான்றிதழ் பெற்று

திமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானுக்கு அவருக்கு நெருக்கமானவர்களே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்