close
Choose your channels

விஷாலின் ஆக்சன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதனை அடுத்தே இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டன. முதல்கட்டமாக இந்த படத்தின் டீசர் வரும் 13ம் தேதி வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு அட்டகாசமான விஷாலின் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து விஷால் ரசிகர்கள் படத்தின் டீசரை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்

விஷால், தமன்னா, கபீர் சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை Trident Artsரவீந்திரன் ரவீந்திரன் தயாரித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.