விஷாலின் 'அயோக்யா' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,May 07 2019]

விஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வந்தது

இந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் பணிகள் முடிந்துவிட்டதை அடுத்து இந்த படம் வரும் 10ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்மோகன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் விஷ்ணு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.