விஷால் படப்பிடிப்பு திடீர் ரத்து: பல லட்சங்கள் நஷ்டமானதாக தகவல்

  • IndiaGlitz, [Friday,December 07 2018]

விஷால் நடித்து வரும் ;அயோக்யா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று விழுப்புரம் மவட்டத்திலுள்ள கூனிமேடு மசூதி அருகே நடைபெற திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு விஷால், நாயகி ராஷிகண்ணா உள்பட படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டனர். ஆனால் நேற்று பாபரி மசூதி இடிக்கபட்ட நினைவு நாள் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்க கூடாது என்று கருதி காவல் துறையினர் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் நேற்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த படப்பிடிப்பு ரத்தானதால் தயாரிப்பாளருக்கு பல லட்சங்கள் நஷ்டம் என கூறப்படுகிறது..

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கேஎஸ் ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வெங்கட்மோகன் இயக்கி வருகிறார். சாம் சிஎஸ் இசையமைத்து வரும் இந்த படத்தில் சன்னிலியோன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஹீரோவாகும் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைத்துறையில் வாய்ப்புகள் பெற்று ஜொலித்து

'விஸ்வாசம்' படத்தின் புதிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

வரும் பொங்கல் தினத்தன்று ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் திடீர் மாயம்: நடந்தது என்ன?

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை திடீரென காணவில்லை என அவரது மனைவி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்து அதன் பின் சிலமணி நேரங்களில் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்லை: 'கனா' பாடல் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் வெளியாகவுள்ள நிலையில்

ஒரே வாரத்தில் 5 படங்கள்: காற்றில் பறக்கவிடப்பட்ட விதிமுறைகள்

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் விதிக்கப்பட்ட விதிகளில் ஒன்று ஒவ்வொரு வாரமும் திரைப்பட வெளியிட்டு குழுவின் அனுமதி பெற்று 3 அல்லது 4 படங்கள் மட்டுமே வெளியாகும்