விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய படங்களில் ரிலீஸ், கடந்த வெள்ளி முதல் தொடங்கியது. கடந்த வெள்ளியன்று 'மெர்க்குரி' திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில்  வரும் வெள்ளியன்று 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், பக்கா மற்றும் தியா ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்ற இந்த படத்தில் மேஜர் கதிரவன் கேரக்டரில் விஷாலும் சைக்காலஜி டாக்டர் ரதிதேவி கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆக்சன்கிங் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.