close
Choose your channels

விஷாலின் 'லத்தி' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் குஷி!

Saturday, December 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ‘லத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் விஷால் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி நடித்ததால் இரண்டு முறை காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் ‘லத்தி’ படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விஷாலின் நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் நந்தாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான நிலையில் விரைவில் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.