close
Choose your channels

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ஒன்லைன் கதை இதுதான்!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ’எனிமி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த திரைப்படம் வசூல் அளவில் நல்ல வெற்றி பெற்றது என்பதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஷாலின் அடுத்த படமான ’வீரமே வாகை சூடும்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். தற்போது இந்த படம் ஜனவரி 26 வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவன் கதை தான் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் என்றும் இப்படத்தில் விஷால் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த ஒன்லைன் கதை இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஷால், டிம்பிள் ஹைத்தி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.