close
Choose your channels

நடிகர் விஷால் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

Monday, December 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது திருமணம் குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் அனிஷாவை விஷால் திருமணம் செய்யவிருப்பதாகவும், விரைவில் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், அன்றே திருமண தேதியை இருவீட்டார் முடிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிவடையவுள்ள நிலையில் விஷாலின் திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.