close
Choose your channels

மு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த விஷால்!

Saturday, May 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை சுனாமி போல் அடித்தபோதிலும் அதன் ஒரு சிறிய தாக்கம் கூட தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வென்று அபார வெற்றி பெற்றது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது

இந்த நிலையில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக கடந்த சில மாதங்களாக கடுமையான உழைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய, மாநில தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் நடிகர் விஷால். மேலும் அவர் திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மு.க,.ஸ்டாலின் - விஷால் சந்திப்பின்போது திரையுலக பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷாலின் பதவியை தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு டம்மியாக்கியிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos