என்னை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி: விஷால் பட நடிகையின் திடுக் குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Saturday,September 24 2022]

விஷால் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தன்னை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்ததாக புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நடித்த ’தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் அவ்வப்போது ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளாவார் என்பது தெரிந்ததே.

மிஸ் இந்தியா அழகி பட்டத்தை இவர் வென்றபோது படுக்கையை பகிர்ந்து கொண்டு தான் அழகிப் பட்டத்தை வென்றார் என்று அவர் மீது பிரபல நடிகை ராக்கி சாவந்த் குற்றஞ்சாட்டினார்.

மேலும் நடிகை தனுஸ்ரீ முன்னணி நடிகரான நானா படேகர் மீது மீடூ புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தனுஸ்ரீ தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் பலமுறை தன்னுடைய காரில் பிரேக்கை செயலிழக்க வைத்து சதி செய்ததாகவும் கூறினார். மேலும் தனது வீட்டில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து தன்னை கொல்ல சதி நடந்ததாகவும் அவர் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

எஸ்கே நடனம், மரியாவின் கொள்ளை அழகு தமனின் கேமியோ.. 'பிரின்ஸ்' ஜெஸிக்கா பாடல் செம ஹிட்!

 நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று இரவு வெளியாகி

'துணிவு'க்காக பாங்காக் புறப்பட்ட அஜித்: எத்தனை நாள் படப்பிடிப்பு தெரியுமா?

அஜித் நடித்து வரும் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பாங்காக் சென்று உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

58 வருடங்களுக்கு பின் ரீமிக்ஸ் செய்யப்பட்ட சிவாஜி கணேசன் பட பாடல்: வீடியோ வைரல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'புதிய பறவை' என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை 58 வருடங்களுக்கு பின்னர் விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பதும்

திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் எஸ்கேப்: மணமகன் போட்ட சூப்பர் பிளான்!

திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன நிலையில் மணமகனின் மாஸ்டர் பிளான் காரணமாக போலி மணமகள் மற்றும் அவருடைய கூட்டணியினர்

'பொன்னியின் செல்வன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.