close
Choose your channels

விஷால் பட நாயகிக்கு இவ்வளவு பெரிய மகளா? சினிமாவிலும் நடித்துவிட்டாரா?

Wednesday, May 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட நிலையில் அவருடைய மகள் திரைப்படத்திலும் நடித்து விட்டார் என்ற தகவல் மேலும் ஆச்சரியத்தை அதிகரித்துள்ளது.

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ’தாமிரபரணி’ என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பானு. அதன் பின்னர் ’ரசிகர் மன்றம்’ ’அழகர் மலை’ ’சட்டப்படி குற்றம்’ ’பொன்னர்-சங்கர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்ட பானுவுக்கு 2016 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது ஆறு வயதாக இருக்கும் இந்த பெண் குழந்தை மலையாள திரைப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.

சமீபத்தில் பானு தனது சமூக வலைத்தளத்தில் மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகரகள் நடிகை பானுவுக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.