close
Choose your channels

சூர்யா இடத்தை பிடித்தார் விஷால்!

Tuesday, January 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த திரைப்படம் ரிலீஸ் ஆகவேண்டிய தேதியில் விஷால் நடித்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பிரம்மாண்டமான திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் வெளியாகும் புதிய போஸ்டர்களில் ரிலீஸ் தேதி இல்லை என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஷால், டிம்பிள் ஹையாத்தி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.