விஷாலின் அடுத்த படத்திற்கு சிவாஜி பட டைட்டில்?

  • IndiaGlitz, [Tuesday,August 30 2016]

விஷால் தற்போது நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் டப்பிங் பணியில் விறுவிறுப்பாக உள்ளார் என்றும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தை அடுத்து விஷால், மிஷ்கின் இயக்கவுள்ள துப்பறிவாளன்' படத்தில் நடிக்கவுள்ளார். அதனையடுத்து அவர் லிங்குசாமி இயக்கும் 'சண்டக்கோழி 2' படத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் சங்க வேலைகளும் அவருக்கு அவ்வப்போது உள்ளது.
இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவும் அந்த படத்தை அவரே தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு 'இரும்புத்திரை' என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 1960ஆம் ஆண்டு 'இரும்புத்திரை' என்ற டைட்டிலில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, வைஜெயந்திமாலா, எஸ்.வி.ரங்காராவ் நடித்த படம் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தர்மதுரை'யை பாராட்டிய பிரபல இயக்குனர்

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மாபெரும் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில்...

'இருமுகன்' படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

சீயான் விக்ரம் முதன்முதலில் இரண்டு வித்தியாசமான வேடங்களிலும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன்...

'விஜய் 60' படத்தில் விஜய்யின் கேரக்டர் என்ன தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் தனுஷ். அதிகாரபூர்வ தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்பாம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.800 கோடி...

கமல் பாணியை பின்பற்றும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும்...