விஷாலின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கனெக்சன்

  • IndiaGlitz, [Thursday,August 23 2018]

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளப்தி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் முதன்முதலாக உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட்மோகன் இயக்கும் முதல் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் விஷால் நாயகனாகவும், ராஷிகண்ணா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். இந்த பூஜை விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு தனது முதல் உதவி இயக்குனருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை விஷால் படத்தை இயக்கவில்லை என்றாலும் அவருடைய உதவியாளர் விஷாலுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'அயோக்கியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார்.