close
Choose your channels

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்

Wednesday, November 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த நிலையில் விஷால் தற்போது ’சக்ரா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தன் இயக்கி வரும் இந்தப் படத்தில் நாயகியாக ஷராதா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே

‘சக்ரா’ படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் இன்னொரு திரைப்படம் மிஷ்கின் இயக்கி வரும் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படம் ஆகும். இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, கௌதமி, ரகுமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பும் அவ்வப்போது லண்டனில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இன்னொரு படத்தில் நடிக்க நடிகர் விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ’அரிமா நம்பி’, ’இருமுகன்’ மற்றும் ‘நோட்டா’ ஆகிய ஹிட் வெற்றி படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஆனந்த் சங்கர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

விஷால் மற்றும் ஆனந்த்சங்கர் முதல் முறையாக இணையும் இந்தப் படமும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்று கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.