ஐதராபாத்தை நோக்கி படையெடுக்கும் விஷால் படக்குழு: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளில் அறிவித்து கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்றும் அதேபோல் திரையரங்குகள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்ல உள்ளனர்.

குறிப்பாக விஷால் நடிப்பில் து.பா.ஆ சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறுகிய காலத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் படம் மட்டுமன்றி வேறு சில தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

'தி ஃபேமிலிமேன் 2' வெற்றி எதிரொலி: நயன்தாராவை மிஞ்சிய சமந்தாவின் சம்பளம்?

சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன் 2' என்ற வெப்தொடர் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 2 படங்களில் நடிக்கும் மாஸ் நடிகர்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பதும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆபாச பேச்சு, அதிகார மிரட்டல்....! யார் இந்த பப்ஜி மதன்...?

மதன் குமார் மாணிக்கம் என்பது இவரோட முழுப்பெயராகும். சிவில் எஞ்சினியரிங் முடித்த இளைஞர், பணக்கராக வீட்டு பையன் என்றும் சொல்லலாம்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு! 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

வரும் 21 ஆம் தேதி முதல் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று அதிமுக

தேசிய விருது பெற்ற இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்: நடிகை கஸ்தூரி இரங்கல்!.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து உள்ளார்