மீண்டும் மிஷ்கினுடன் இணையும் விஷால்?

  • IndiaGlitz, [Monday,July 13 2020]

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்த ’துப்பறிவாளன்’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நிலையில் திரைப்படம் முடிவடையும் நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனை அடுத்து மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் விஷாலே இந்த படத்தின் மீதிப்பகுதியை இயக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதைபோல் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை மீண்டும் மிஷ்கினே இயக்க விஷால் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் விஷால் மற்றும் மிஷ்கின் தரப்பிலிருந்து இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. மேலும் ’துப்பறிவாளன் 2’ படத்தை சிறப்பாக முடிக்க மிஷ்கினால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்து இந்த முடிவை விஷால் எடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகிவரும் ’துப்பறிவாளன் 2’ படத்தில் விஷால், பிரசன்னா, ரகுமான், முன்னா சைமன், ஆதித்யாமேனன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 

More News

உலகிலேயே முதல் முறையாக கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்!!! குதூகலிக்கும் நாடு!!!

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் இடம் மாறுகிறதா டிக்டாக் அலுவலகம்?

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே சமீபத்தில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

அலாரம் வச்சுக்கொங்க, 'டாக்டர்' அப்டேட் வருது: சிவகார்த்திகேயன் அறிவிப்பு

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்

தமிழகம் முழுவதும் ஜூலை 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு

தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ரூ.75 ஆயிரம் கோடி இந்தியாவில் முதலீடு: பிரதமருடன் உரையாடிய பின் சுந்தர்பிச்சை அறிவிப்பு

பிரதமர் மோடியுடன் உரையாடிய சில நிமிடங்களில் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.