close
Choose your channels

'ஆக்சன்' திரைப்படம் வெளியீடு: விஷால் முக்கிய அறிக்கை

Tuesday, November 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த ‘ஆக்சன்’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் விஷால் மக்கள் இயக்கத்தின் செயலாளர் விஷாலின் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை விஷால் வெளியிட்டுள்ளார்.

அதன்படி ’நவம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள ‘ஆக்சன்’ திரைப்படத்திற்கு பேனர்கள், கொடிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும், பேனர்கள், கொடிகள், தோரணங்கள், மற்றும் தியேட்டர்களில் செய்யும் அலங்காரங்களுக்கு ஆகும் பணத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்ததால் பலியான நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அந்தந்த படத்தில் நடித்த மாஸ் நடிகர்கள் இதுபோன்ற வேண்டுகோள்களை தனது ரசிகர்களுக்கு வைத்து வருகின்றனர். ‘அசுரன்’ வெளியான போதும் தனுஷூம், ‘காப்பான்’ வெளியானபோது சூர்யாவும் இவ்வகை வேண்டுகோளை வைத்தபோது, அதன்படி ரசிகர்கள் பேனர்களுக்கு பதிலாக மக்கள் நலத்திட்டங்களை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் கடந்த தீபாவளி அன்று பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளியானபோதும் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படியே தற்போது விஷாலும் இந்த வேண்டுகோளை தனது ரசிகர்களுக்கு முன்வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.