close
Choose your channels

'பேட்ட', 'விஸ்வாசம்' ரிலீஸ் தேதிகள் குறித்து விஷால்

Friday, December 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவரவுள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த இரண்டு படங்களில் ஒன்று ஜனவரில் 10ல், இன்னொன்று ஜனவரி 15ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பேட்டியளித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், 'ஜனவரி 10ஆம் தேதி பேட்ட மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இரண்டு படங்களும் ஜனவரி 10ல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இருப்பினும் இரு படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிக்கும்போதே இரு படங்களின் சரியான ரிலீஸ் தேதி தெரியவரும். ஓரிரண்டு நாட்கள் முன்பின் என்றாலும் இரு படங்களும் பொங்கல் தினத்தில் வெளிவரும் மட்டும் உறுதி என்பதே இப்போதைய தகவல்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.