நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை.. த்ரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் குறித்து விஷால்..

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜுவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விஷாலும் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஆவேசமாக ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த முட்டாள் நம் திரையுலகை சேர்ந்த ஒருவரை மிகவும் கேவலமாக பேசி உள்ளதாக கேள்விப்பட்டேன். உங்கள் பெயரை அல்லது நீங்கள் குறி வைத்த நபரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதை செய்தீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும், அதனால் நான் நிச்சயம் பெயரை கூற மாட்டேன்.

நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் அல்ல, திரையுலகில் சக கலைஞர்களாகவும் வாழ்ந்து வருகிறோம். நீங்கள் செய்த காரியத்திற்கு உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களை சரியானபடி கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன். பூமியில் இருக்கும் இத்தகைய ஒரு இழிவான பிறவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவு செய்வது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.

நீங்கள் செய்தது முற்றிலும் தவறான ஒரு செயல், உண்மையில் நான் உங்களை கண்டிக்க விரும்பவில்லை, ஆனால் நீங்கள் இதற்காக தண்டனையை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை நான் வெளியிட விரும்பவில்லை.

இந்த பூமியில் ஒரு மனிதனாக நீங்கள் ஒருபோதும் இருக்க முடியாது என்று தெரிகிறது. நிச்சயமாக இது பிரபலங்களை பற்றி எதிர்மறை கருத்து தெரிவித்து அந்த விளம்பரத்தில் பணம் சம்பாதிக்கும் முயற்சிதான், இது போன்ற போக்கு அதிகரித்து விட்டது, குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது தயவு செய்து கற்றுக் கொள்ளுங்கள்’ என்று நடிகர் விஷால் பதிவு செய்துள்ளார்.

More News

தனுஷின் 'ராயன்' படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை.. சொன்னது யார் தெரியுமா?

தனுஷின் 50வது திரைப்படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

த்ரிஷாவை பற்றி நான் அப்படி சொல்லவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த அரசியல்வாதி..!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகில் இருந்து கடும் எதிர்ப்பு

நடிகர் கவின் குறித்து பரவி வரும் வதந்தி.. சுந்தர் சி தரப்பு அளித்த விளக்கம்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 'கலகலப்பு 3' திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வரும் நிலையில் இது குறித்து சுந்தர் சி தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்திய விவகாரம்..ஆர்கே செல்வமணி அறிக்கை..!

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்தி பேசிய முன்னாள் அதிமுக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி இது குறித்து கண்டனம்

ஓடிடி விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார்,