என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நல்லது செய்து கொண்டே இருப்பேன். விஷால்

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

நடிகர் சங்க செயலாளரும், பிரபல நடிகருமான விஷால் தற்போது 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார். சிதம்பரம் மாவட்டம் பிச்சாவரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கமும், ஆபர் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கு காலணிகள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டது. பின்னர் இந்த விழாவில் விஷால் பேசியதாவது:
ஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கே நாம் எதற்காக போகிறோம், என்ன செய்ய போகிறோம், நாம் அங்கு செல்வதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்பதை அலசி பார்த்து தான் எல்லா நிகழ்ச்சிக்கும் நான் செல்கிறேன். நான் இங்கு இருந்து கிளம்பியவுடன் எனக்கு அணிவித்த இந்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைக்க போகிறேன். எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சால்வை அணிவிப்பது.
முதலில் மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மேடையில் அமர வேண்டும். நான் உங்கள் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு தான் இந்த மேடை. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை இங்கே நின்று பேசுவதற்கு. நான் இந்த கிராம மக்களுக்கு மட்டும்மல்ல காதால் கேட்கும் விஷயங்களுக்கும், கண்ணால் பார்க்கும் விஷயங்களுக்கும் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன்.
நான் உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி வயதான பெண்மணி ஒருவருக்கு உதவி செய்துள்ளார். இது மிகப்பெரிய ஒரு விஷயமாகும். நான் வளர்ந்து இந்த நிலைக்கு வந்த பிறகு தான் அனைவருக்கும் உதவி செய்கிறேன். நான் நல்ல நிலைக்கு வர நீங்கள் தான் காரணம் , நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சமூகத்துக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் உதவி வருகிறேன். என்னை பாராட்டுவதை விட எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள இந்த மாணவியை பாராட்டுவது தான் சரியாக இருக்கும்

More News

சிகிச்சையின்போது ஜெயலலிதா புகைப்படம் வெளியிடாதது ஏன்? அப்பல்லோ பதில் மனு தாக்கல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது...

11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திரும்பும் அஜித்தின் 'வரலாறு'

மூன்று வேடங்களில் தல அஜித் மற்றும் அசின் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய படம் 'வரலாறு.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த டிராபிக் ராமசாமி வழக்கில் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த வாக்கெடுப்பு ரகசிய முறையில் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் அணியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்...

அஜித் தான் இதற்கு முழு காரணம். சாந்தனு பாக்யராஜ்

கோலிவுட் திரையுலகில் அறிமுக நடிகர், நடிகைகளும், வளர்ந்து வரும் நட்சத்திரங்களும் தங்கள் படங்களின் ரிலீசின்போது அஜித் குறித்து ஏதாவது சொல்லி தங்கள் படங்களுக்கு புரமோஷன் செய்வதை வழக்கமாகி கொண்டுள்ளனர்

ஜெயலலிதா சிலை திறக்க பரோலில் வருகிறாரா சசிகலா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நாளை அதிமுகவினர்களால் கொண்டாடப்பட உள்ளது. ஜெயலலிதா மறைந்த பின்னர் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் இந்த வருட பிறந்த நாளை அதிமுக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்...