close
Choose your channels

அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷால்!

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் தொழிலதிபரின் மகள் அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில் தனது வருங்கால மனைவி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஷால் கூறியுள்ளார்.

தெருநாய்கள் குறித்த படம் ஒன்றை தான் எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதுகுறித்த ஆலோசனையின்போதுதான் தான் அனிஷாவிடம் பழகியதாகவும், முதல் பார்வையிலேயே அவரை தனக்கு பிடித்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும் அனிஷா சமூக சேவகி, கூடைப்பந்து வீராங்கனை என்பது மட்டுமே அனைவருக்கும் தெரியும் என்றும் ஆனால் அவர் புலிக்கு பயிற்சி கொடுக்கும் திறமை கொண்டவர் என்று பலருக்கு தெரியாது என்றும் கூறிய விஷால், எந்த புலியையும் அவர் தூங்க வைத்துவிடுவார் என்றும் இதுகுறித்த அனிஷாவின் வீடியோ ஒன்றை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரின் திருமணங்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் ஒரே மேடையில் இருவரது திருமணங்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.