close
Choose your channels

விஷாலின் 48 மணி நேர சாதனை

Sunday, February 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், ராசிகண்ணா நடிப்பில் ஏஆர் முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கி வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப்பிரமாண்டமாக போடப்பட்டுள்ள நீதிமன்றம் செட்டில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மூன்று நாட்களாக இதே செட்டில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் மற்ற நடிகர்கள் அவரவர் காட்சியில் நடித்துவிட்டு சென்றுவிட்டாலும் விஷால் மட்டும் தொடர்ந்து 48 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அவருடைய காட்சி அடுத்தடுத்து இருப்பதால் இரவுபகல் பாராமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்து சாதனை புரிந்துள்ளார்.

விஷால், ராசிகண்ணா, பார்த்திபன், ராதாரவி, கே எஸ் ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு மற்றும் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்ட நீதிமன்ற காட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.