close
Choose your channels

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தின் மாஸ் அப்டேட்!

Thursday, July 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து வரும் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது என்றும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரிக்கிறார் என்பதும், இவர் ஏற்கனவே விஷால், ஆர்யா நடித்த ’எனிமி’ என்ற படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருவதாகவும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வித்தியாசமான கதை என்றும் கூறப்பட்டது

மேலும் இந்த படத்திற்காக கடந்த 1990களில் இருந்த அண்ணாசாலை போன்ற செட் போடப்பட்டதாகவும், உமேஷ் என்ற கலை இயக்குனர் இந்த செட்டை வடிவமைத்து வந்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் அப்டேட்டாக ஜூலை 18 முதல் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.