நான் ஆர்.கே. நகர் தேர்தலில் நிற்க கூடாது என்று நினைத்தவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

  • IndiaGlitz, [Thursday,December 28 2017]

சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று 'இரும்புத்திரை' டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால் நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கமுடியாமல் போனதற்காக இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்.

இந்த விழாவில் விஷால் மேலும் பேசியதாவது: 'ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய திரைப்படம் இரும்புத்திரை. ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால் படம் வர தாமதமாகியது. நான், என் படம், என் வாழ்க்கை என நினைத்திருந்தால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றிருக்கவே மாட்டேன். பொதுநலன் சார்ந்து சிந்தித்ததால்தான் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றேன். என்னைப் பற்றி பல்வேறு கருத்துகள், அவதூறுகள் வரலாம். ஆனால், நான் கண்ணாடியைப் பார்க்கும்போது என்னை நான் குற்றமற்றவனாக பார்க்க வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் நடக்கிறேன். கண்ணாடிதான் என் நண்பன்.

நான் ஆர்.கே நகர் தேர்தலில் நிற்கமுடியாமல் போனதற்கு இயக்குநர் மித்ரன் மகிழ்ந்திருப்பார். ஏனென்றால் ஒருவேளை நின்றிருந்தால் இன்னும் படம் வெளிவர தாமதமாயிருக்கும்' என விஷால் பேசினார்