'எனிமி' படத்தின் அடுத்தகட்ட பணி: விஷால் வெளியிட்ட வீடியோ!

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ’எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது பகுதியின் டப்பிங் பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தை இருப்பதாகவும் விரைவில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் அந்த டுவிட்டில் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது