இன்று முதல் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் விஷால்

  • IndiaGlitz, [Sunday,June 04 2017]

கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் 'வில்லன்' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் மோகன்லாலுடன் விஷால் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பிரபல நடிகை ஹன்சிகா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூலை இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், விஷால், ராஷி கண்ணா, உள்பட பலர் நடித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

More News

லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மான்செஸ்டர் நகரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீள முடியாத நிலையில் இன்று மீண்டும் லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்...

ரஜினியின் அரசியல் சாணக்கியத்தனம் தொடங்கிவிட்டதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிக விரைவில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

மீண்டும் இணைந்த 'என்னை அறிந்தால்' வெற்றிக் கூட்டணி

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் தற்போது தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் மேலும் ஒரு புதிய படத்தை இயக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சிவாஜிக்கு குருவாக இருந்த பழம்பெரும் காமெடி நடிகர் காலமானார்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சாமிக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 95...

கமல், ரஜினி முடிவுகள் குறித்து கருத்து கூறிய சமுத்திரக்கனி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளது குறித்தும், ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கமல் கூறியது குறித்தும் பிரபல இயக்குனர், நடிகர், சமுத்திரக்கனி தனது கருத்தை தெரிவித்துள்ளார்...