close
Choose your channels

'விஷால் 32' படத்தின் அட்டகாசமான டைட்டில் போஸ்டர்!

Sunday, October 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷாலின் 32வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் விஷாலின் 32வது படத்திற்கு ‘லத்தி சார்ஜ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் ரமணா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார்

இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் இந்த டைட்டில் போஸ்டரில் இருந்து விஷால் இந்த படத்தில் முருகானந்தம் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரியவருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்ததுவிடும் என்றும், அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.