ஹரியின் 'ரத்னம்' படப்பிடிப்பு.. விஷால் தந்த சூப்பர் அப்டேட்..!

  • IndiaGlitz, [Tuesday,January 23 2024]

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக விஷால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் சில சூப்பர் அப்டேட்டுகளை அவர் தெரிவித்துள்ள நிலையில் விஷாலின் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமைந்துள்ளது.

விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் ஹரி அவர்களுடன் தான் மூன்றாவது முறையாக மீண்டும் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை ஆகிய இடங்களில் நடந்ததாகவும் இந்த படத்தை விரைவாக முடிக்க உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கு நன்றி என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் அற்புதமான சிங்கிள் பாடலை விரைவில் வெளியிடுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை திரையில் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவம் ஏற்படும் என்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சமாகவும் ஆக்ஷன் விருந்தாகவும் இருக்கும் என்றும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவில், பாலாஜி கலை இயக்கத்தில், ஜெ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

சிவகார்த்திகேயனின் முதல் இரண்டாம் பாக திரைப்படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. தற்போது கூட 'இந்தியன் 2' உள்பட ஒரு சில இரண்டாம் பாகம்

தலைவரின் குட்டிக்கதை..  ஏஆர் ரஹ்மான் மேஜிக்.. 'லால் சலாம்' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

அனுமன் வேடத்தில் நடித்தவர் மேடையிலேயே உயிரிழப்பு.. நடிப்பு என மக்கள் நினைத்ததால் அதிர்ச்சி..!

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் ராமர் குறித்த பாடல்கள் நாடகங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில்  ஹரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் நடைபெற்ற

இதுவரை இல்லாத வேற லெவல் ஓப்பனிங் பாடல்.. 'கங்குவா' படத்தின் ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த பிரம்மாண்டமான தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் அதில் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.