விஷாலின் 'கத்திச்சண்டை' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,October 09 2016]

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் சிறு மாற்றமாக இந்த படம் நவம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் டீசர் வரும் 14ஆம் வெளியாகவுள்ளது. இந்த தகவலை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு தீபாவளி தினத்தில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வைகைப்புயல்' வடிவேலு நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஜெகபதிபாபு மற்றும் தருண் அரோரா வில்லன்களாக நடித்துள்ளனர். மேலும் ஒரு முக்கிய காமெடி வேடத்தில் சூரி நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை எஸ்.நந்தகோபால் மற்றும் விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

'கபாலி' நடிகருக்கு கிடைத்த பாலிவுட் வாய்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் நடித்த அனைவருக்குமே அந்த படம் மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த விஸ்வநாத்துக்கு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நயன்தாரா படத்திற்கு உதவி செய்த ஏ.ஆர்.முருகதாஸ்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தொடர்ந்து வெற்றி படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அதர்வா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

'கபாலி'யை அடுத்து 'காஷ்மோரா' தான்.....

கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ள 'காஷ்மோரா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் எப்போது?

கடந்த ஆண்டு நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவி இந்த ஆண்டு அவர் நடித்த 'மிருதன்' படம் மட்டுமே வெளிவந்துள்ளது.

இவங்க மூணு பேருக்கும் தம்பியாக நடிக்க விரும்பினேன். சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் 10 படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் அதற்குள் மாஸ் நடிகர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார்.