'துப்பறிவாளன்' முதல் ஆரம்பமாகும் விஷாலின் 'ஒரு ரூபாய்' திட்டம்

  • IndiaGlitz, [Thursday,September 14 2017]

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று விவசாயிகளின் 'ஒரு ரூபாய்' திட்டம். இந்த திட்டத்தின்படி திரையரங்குகளில் வசூலாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து அதை விவசாயிகளுக்கு தரவுள்ளதாக அறிவித்தார்.

இந்த திட்டத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த திட்டத்தை 'துப்பறிவாளன்' படத்தில் இருந்து ஆரம்பித்துள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.

இன்று வெளியாகும் 'துப்பறிவாளன்' படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து அதை விவசாயிகளுக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி அனைவரின் பாராட்டுக்களை பெற்று வரும் விஷால், ஒரு ரூபாய் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

அரியலூர் மாணவி ரங்கீலா விவகாரம்: விஜய் நற்பணி மன்றம் விளக்கம்

தளபதி விஜய் மாணவர்களின் கல்வி உள்பட பல்வேறு உதவிகளை விளம்பரம் இன்றி செய்து வருகிறார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும்

நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால்: டி.ராஜேந்தரின் விறுவிறுப்பான பேட்டி

அரசியல் களத்தில் அவ்வப்போது புயலை கிளப்பிவிட்டு செல்லும் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 'நான் சொன்னதை சசிகலா கேட்டிருந்தால் இன்று அவர் குளுகுளு அறையில் இருந்திருப்பார்

பிரபல இயக்குனரின் பாராட்டை பெற்ற விஷாலின் 'துப்பறிவாளன்'

விஷால் நடித்த துப்பறிவாளன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆப்பிள் ஐபோனின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 'விவேகம்'

உலகின் நம்பர் ஒன் ஐபோன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் நிறுவி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் ஆப்பில் ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆர்டர் செய்ததோ ஸ்மார்ட்போன், வந்ததோ சோப்புக்கட்டி

தற்போதைய டெக்னாலஜி உலகில் பெரும்பாலான பொருட்கள் இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்களும் அதன் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர்.