மீண்டும் எம்.ஜி.ஆர் பெயருடன் களமிறங்கும் விஷால்

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]

விஷால் மூன்று வித்தியாசமான வேடங்களில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர் என்று கூறப்படும் 'மதகஜராஜா' என்ற திரைப்படம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆகிவிட்டதால் இந்த படத்தின் பிரச்சனைகளை பேசி முடித்து விரைவில் வெளியிட முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஷால் தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பான 'நாளை நமதே' என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த படத்திலும் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இயக்குநர் பொன்ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கும் இந்த படத்தில் நகைச்சுவை கேரக்டரில் சதீஷ் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அவர்களுடைய தேர்வு நடைபெற்று வருவதாகவும் சி.வி.குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

விஷால் ஏற்கனவே 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமூக வலைத்தளங்களில் 'பாகுபலி 2' காட்சிகள் லீக்: படக்குழு அதிர்ச்சி

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' என்ற பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது...

மத்திய, மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள்

சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது...

வறுமையில் வாடும் பிரபல நடிகரின் குடும்பத்திற்கு தாணு நிதியுதவி

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர், 'அடைந்தால் மகாதேவி இல்லையே மரணதேவி' என்ற வசனத்தின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது.

ராகவா லாரன்ஸ் மிஸ் செய்ததை சமுத்திரக்கனி செய்வாரா?

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா', மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

சசிகலா குடும்பம் வெளியேறிவிட்டால் நாங்கள் அனைவரும் அண்ணன் - தம்பிகள். கே.பி முனுசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக தலைவர்கள் அனைவருமே சசிகலாவின் தலைமைக்கு கட்டுப்பட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர்