4 மொழிகளில் 'சக்ரா': ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த விஷால்!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக நடிகர் விஷால் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் எம்எஸ் ஆனந்தன் இயக்கிய ’சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஷால் ’சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார். ’சக்ரா’ திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் பிப்ரவரி 19ஆம் தேதி ரிலீஸாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படம் பிப்ரவரி 19ஆம் தேதி ரிலீஸாகும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே ஹிட்டாகிய நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

More News

தமிழ் இயக்குனரின் அடுத்த படத்திற்காக இணையும் திருமாவளவன் - விஜய்சேதுபதி!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'தெருநாய்கள்', 2018ஆம் ஆண்டு வெளியான 'படித்தவுடன் கிழித்து விடவும்,  மற்றும்  2020ஆம் ஆண்டு வெளியான 'கல்தா' ஆகிய படங்களை இயக்கியவர் ஹரி உத்ரா

பிரபல ஒளிப்பதிவாளர் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்!

பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின்னர் 'கிழக்கே போகும் ரயில்' 'சிகப்பு ரோஜாக்கள்' 'இளமை ஊஞ்சலாடுகிறது' 'புதிய வார்ப்புகள்' 'நிறம் மாறாத பூக்கள்' உள்பட

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? எத்தனை தொகுதிகள்?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன.

குட்டி தேவதைக்கு பெயர் வந்தாச்சு… விராட் கோலி- அனுஷ்கா ஜோடியை வாழ்த்தும் ரசிகர்கள்!

இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தமிழக விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி இடுபொருள் நிவாரணம்… முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிவர் புயலின் தாக்கத்தினால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர்.