close
Choose your channels

விரைவில் விஷால்-வரலட்சுமி திருமணமா?

Thursday, July 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாகவே காதல் ஜோடிகளாக வலம் வந்த விஷால்-வரலட்சுமி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் சங்க தேர்தலின்போது இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. வரலட்சுமியும் தனது டுவிட்டரில், 'காதலில் பிரேக் அப் என்பது புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது. 7 வருட உறவை ஒருவர் தனது மேனேஜர் மூலமாக முறித்துக்கொள்வதாக கூறி உள்ளார். நாடு எங்கே வந்திருக்கிறது என்பதை எண்ணும்போது சிரிப்பு வருகிறது. காதல் எங்கே?` என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று 'துப்பறிவாளன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், 'நான் காமராஜர் அய்யாவின் வழியில் நடப்பவன், இருப்பினும் அவரை போல பிரம்மச்சாரியாக இருக்க விருப்பமில்லை. விரைவில் திருமணம் செய்வேன். லட்சுமிகரமான பெண்ணை திருமணம் செய்வேன்' என்று கூறியுள்ளார். விஷால் கூறிய லட்சுமிகரமான பெண் வரலட்சுமியா? அல்லது வேறு பெண்ணா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.