முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுகிறாரா விஷால்?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் விஷால் விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எதிர்த்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வலிமையான போட்டியாளரை நிறுத்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வலிமையான வேட்பாளரை நிறுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ள நிலையில், அவரது கட்சியினர் நடிகர் விஷாலை பரிந்துரை செய்ததாகவும் விஷால் போட்டியிட்டால் சந்திரபாபு நாயுடுவின் வெற்றி கேள்விக்குறியாகும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் விஷால் பிரபலமானவர் என்பது மட்டுமன்றி சந்திரபாபு நாயுடு போட்டியிடும் குப்பம் தொகுதியில் தான் விஷாலின் தந்தை கிரானைட் தொழில் நடத்தி வருவதால் அந்த பகுதி மக்களிடம் அவர் பிரபலமானவர் என்றும் இதனால் பல பாசிட்டிவ் காரணங்கள் இருப்பதால் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்த்து விஷால் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து விஷால் போட்டியிடுவது குறித்து அவருடைய தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.