விஷ்ணு பட உரிமையை கைப்பற்றிய சூப்பர் குட் பிலிம்ஸ்

  • IndiaGlitz, [Wednesday,October 12 2016]

நடிகர் விஷ்ணு முதன்முதலில் தயாரித்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' தமிழகத்தில் நூறு நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்த படத்தால் அவருடைய மார்க்கெட் உயர்ந்ததை அடுத்து தற்போது இந்த படம் தெலுங்கில் டப் ஆகி வருகிறது.
இந்த படத்தின் தெலுங்கு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி பெற்றுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் வெளீயாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் விஷ்ணு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கிட்டு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டாக்குமெண்ட்ரி பிலிம் இயக்குகிறார் ஜோதிகா

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் நடித்து வரும் படம் 'மகளிர் மட்டும்' என்பது அனைவரும் அறிந்ததே...

சூப்பர் ஸ்டார் படத்தில் ரீஎண்ட்ரி ஆனதில் மகிழ்ச்சி. நமீதா

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த நடிகை நமீதா திடீரென உடல் எடை அதிகரித்த காரணத்தினால் வாய்ப்புகள்...

'தல'ய பார்த்தால் தன்னம்பிக்கை வரும். அப்புக்குட்டி பட பாடல்

தல அஜித்தின் தீவிர ரசிகர் மட்டுமின்றி அவரது அன்புக்கு பாத்திரமானவர்களில் ஒருவர் அப்புக்குட்டி.

'ரெமோ'வுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவியது எப்படி? வெளிவராத தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் மற்றும் இயக்குனர்

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், தற்போது கிட்டத்தட்ட முழுநேர நடிகராக மாறிவிட்டதோடு முன்னணி நடிகர்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து வருகிறார்