பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டு அழுது கொண்டே செல்லும் விஷ்ணு... என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,December 11 2023]

பூர்ணிமாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷ்ணு அழுது கொண்டே செல்லும் காட்சி இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் உள்ளது

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக 70 வது நாளை தாண்டி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று வரை கலகலப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்த விஷ்ணு, நேற்றைய கமல் எபிசோடுக்கு பிறகு ரொம்பவே மனம் உடைந்து விட்டார்

இன்று முழுவதுமே அவர் மிகவும் சோகமாக இருக்கும் நிலையில் பூர்ணிமாவிடம் அவர் மன்னிப்பு கேட்கிறார். ’நீங்களும் தினேஷம் சேர்ந்து கொண்டு என்னென்ன செய்தீர்கள் என்று எனக்கு தெரியும்’ என பூர்ணிமா கூறியபோது, ‘உன் மனம் வருத்தப்படும்படி நான் நடந்து விட்டேன் என்பது உண்மைதான், மன்னித்துக்கொள்’ என்று கூறுகிறார்.

’வெளியில் சென்றவுடன் நாம் நண்பர்களாக இருக்கலாம்' என்று பூர்ணிமா சொல்ல அதற்கு விஷ்ணு அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு செல்கிறார். பூர்ணிமாவும் மிகவும் சோகமாக இருக்கும் காட்சியுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பூர்ணிமா மற்றும் விஷ்ணு நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது விஷ்ணு மீண்டும் மன்னிப்பு கேட்டதை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் நெருக்கம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9.. டைட்டில் வென்ற போட்டியாளர்..!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையில் நடைபெற்றது.

நியாயப்படி த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கண்டனம்..!

நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடுத்த மன்சூர் அலிகான் இடம் நீதிபதி 'நியாயப்படி பாதிக்கப்பட்ட த்ரிஷா

திரையுலகில் சமந்தாவின் புதிய அவதாரம்... புதிய முயற்சிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

 தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான  சமந்தா தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரம் எடுத்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தொண்டர்கள் பிரார்த்தனை பலித்தது.. விஜயகாந்த் குறித்த மகிழ்ச்சியான செய்தி..!

 கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுக்கு மேல என்னால முடியாது, நான் வெளியே போறேன்.. திடீரென விஷ்ணு எடுத்த முடிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணு 'நான் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று நினைக்கிறேன், இதுக்கு மேல என்னால முடியாது' என்று மனவிரக்தியில் கூறும் காட்சி அடுத்த ப்ரோமோ வீடியோவில்