சென்னை மெட்ரோ ரயிலில் விஷ்ணு காதல்

  • IndiaGlitz, [Sunday,July 05 2015]

சென்னை நகர மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை கடந்த திங்கட்கிழமை தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. பயணிகளின் பெரும் ஆதரவை பெற்றுள்ள மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பார்வையிடுவதற்காக ஏராளமானோர் வருகின்றனர். சென்னை மக்களின் மனதை கவர்ந்துள்ள இந்த மெட்ரோ ரயில் தற்போது கோலிவுட் பார்வையிலும் பட்டுவிட்டது. முதன்முதலாக இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படம் ஒன்றிற்காக விரைவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன், தற்போது "போடா ஆண்டவனே என் பக்கம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு, பிரயாகா மார்ட்டின் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் விஷ்ணுவும், பிரயாகாவும் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது காதல் ஏற்படுவதாக ஒரு காட்சி வருகிறது. இந்த காட்சியை புறநகர் ரயிலில் படமாக்க முதலில் இயக்குனர் ஆர்.கண்ணன் முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது மெட்ரோ ரயில் சேவை தொடங்கி விட்டதால், மெட்ரோ ரயிலிலேயே இந்த காட்சியை எடுக்க முடிவு செய்துள்ள இயக்குனர், இதற்காக அனுமதி கோரி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சத்யா இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

More News

ஹன்சிகாவிற்காக பாட்டு பாடிய கமல்-ரஜினி நாயகி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் ஜெயப்ரதா.....

அடுத்தடுத்து ரிலீஸாகும் ஜெயம் ரவியின் படங்கள்

ரவி, ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதே உற்சாகத்துடன் ஜெயம் ரவியின் அடுத்த படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.....

தனுஷ் படத்திற்காக தயாரான சென்னை டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில்

'கயல்' வெற்றி படத்தை தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முடிவடைந்து தற்போது படப்பிடிப்பிற்கு பிரபுசாலமன் குழுவினர் தயாராகவுள்ளனர். இம்மாதம் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது....

பாபநாசம்- முன் தீர்மானங்களை முறியடித்த படம்

மற்ற மொழிகளில் வெற்றியும் பாராட்டுகளையும் பெற்ற படங்கள் தமிழில் அதே இயக்குனரால் ரீமேக் செய்யப்படுவது பொதுவாக மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும்...

பாலக்காட்டு மாதவன். திரைவிமர்சனம்

சந்தானம், வடிவேலு வரிசையில் மீண்டும் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கின்றார் விவேக். ஹீரோவாக நடித்தாலும் தன்னுடைய டிரேட் மார்க்...