நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் விசேஷம்.. 4வது திருமண நாளில் கிடைத்த பொக்கிஷம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷ்ணு விஷால், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று தெரிந்தது. நடிகர் விஷ்ணு விஷால், ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜுவாலா கர்ப்பமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நாங்கள் ஒரு பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டோம்... ஆர்யன் இப்போது ஒரு அண்ணன் ஆனார்... இன்று எங்களது நான்காவது திருமண நாள்... அதே நாளில் இறைவனின் இந்த அருமையான வரத்தை நாங்கள் வரவேற்கிறோம்... உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் தேவை’ என்று பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
We are blessed with a BABY GIRL..
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 22, 2025
Aryan is an elder brother now...
Its our 4th wedding anniversary today...
On the same day we welcome this gift from the Almighty...😍
Need all your love and blessings....😍😍@Guttajwala 😍😍 pic.twitter.com/vSAPVMXKN8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com