2 சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் விஷ்ணு விஷால்.. ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனருடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ’முண்டாசுப்பட்டி’ என்ற திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. மேலும் மீண்டும் இருவரும் இணைந்த ’ராட்சசன்’ திரைப்படம் தமிழ் திரையுலகின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’முண்டாசுப்பட்டி’ ’ராட்சசன்’ ஆகிய படங்களை அடுத்து மீண்டும் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

இந்த படம் விஷ்ணு விஷாலின் 21 வது படமாக இருக்கும் என்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித் இன்னும் 'துணிவு' படம் பார்க்கவில்லையா? இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில்  ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும்

'அரண்மனை' படத்தின் 4வது பாகம்.. மாஸ் நடிகருடன் களமிறங்கும் சுந்தர் சி!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' திரைப்படம் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் நான்காவது பாகத்தில் மாஸ் நடிகருடன் அவர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்ப்பமான நேரத்தில் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ்: 'துணிவு' நடிகர் மனைவியின் பதிவு வைரல்!

அஜித் நடித்த 'துணிவு' படத்தில் நடித்த நடிகரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தனது காதல் கணவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள

மீண்டும் ஹீரோவாக கவுண்டமணி.. டைட்டில் அறிவிப்பு!

 தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்

ஒரே மாதத்தில் மீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய் படம் ரிலீஸ்!

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக ஒரே நாளில் வெளியானது என்பதும் இந்த இரண்டு படங்களுக்கும்